செவ்வாய், 16 மார்ச், 2010

தத்தி தத்தி - காதல் கொண்டேன்


DEDICATED TO MY AAROMALE
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : தத்தி தத்தி
படம் : காதல் கொண்டேன் 
இசை : யுவன் ஷங்கர் ராஜா


தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்
தங்கச் சிலையை பார்த்தாலே

விட்டு விட்டு போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே

பார்வை பார்வை பாத்தால் நெஞ்சம்
பஞ்சாய் பற்றி கொண்டதாலே

காலம் தோறும் கனவிலே நெஞ்சம்
கால்கள் இன்று வானம் மேலே


ஒரு நண்பன் - எனக்கு 20 உனக்கு 18

பாடியவர் :SPB சரண், வெங்கட்பிரபு, சின்மயி
பாடல் : ஒரு நண்பன் இருந்தால்
படம் : எனக்கு 20 உனக்கு 18
இசை : ஏ ஆர் ரஹ்மான்


ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடுவானம் பக்கமே
தொடவேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்

கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பதெங்கள் முகவரி
இது வாழ்க்கைப் பாடத்தில் முதல்வரி
நீண்ட உலகின் மிகப்பெரும் ஏணி
நண்பனில்லாதவன் ஹே

ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடுவானம் பக்கமே
தொடவேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்

தோல் மீது கைப் போட்டுக் கொண்டு
தோன்றியதெல்லாம் பேசி ஊரைச் சுற்றி வந்தோம் வந்தோம்
ஒரு வீட்டிலே படுத்து தூங்கினோம்
நட்பின் போர்வைக்குள்ளே

இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு

ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடுவானம் பக்கமே
தொடவேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல
நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவுக் கூட்டணி
அதில் நட்பின் ருசி

அட வாழ்க்கை பயணம் மாறலாம்
நட்பு தான் மாறுமா
ஆயுள் காலம் தேய்ந்த நாளில்
நண்பன் முகம் தான் மறக்காது

ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடுவானம் பக்கமே
தொடவேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்


கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பதெங்கள் முகவரி
இது வாழ்க்கைப் பாடத்தில் முதல்வரி
நீண்ட உலகின் மிகப்பெரும் ஏணி
நண்பனில்லாதவன் ஹே

கடவுள் தந்த அழகிய - மாயாவி

பாடியவர் : SPB சரண், கல்பனா
பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வு
படம் : மாயாவி
இசை : தேவிஸ்ரீ பிரசாத்



கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு


எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடை பெரும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனித் தனி காற்றுக் கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இல்லை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்து விட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

ஞாயிறு, 14 மார்ச், 2010

இது வரை - கோவா

DEDICATED TO : CLIFFORD SATISH (FRIEND)
பாடியவர் : அஜீஷ், ஆண்ட்ரியா
பாடல் : இது வரை
படம் : கோவா
இசை : யுவன் ஷங்கர் ராஜா



இது வரை இல்லாத உணர்விது 
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ 

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ 

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக் கிடைத்தது இங்கே 

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக் கிடைத்தது இங்கே

இங்கே ஒரு எண்ணம் வந்து நிறைய 
எப்போது ஏன் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே 
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள 
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ..

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை 
யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் இந்த நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே 

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

பெண்ணே உன் அழகில்(ஓமனப்பெண்ணே)- விண்ணைத்தாண்டி வருவாயா

பாடியவர் : பென்னி தையால் , கல்யாணி மேனன்
பாடல் : பெண்ணே உன் அழகில்
படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ ஆர் ரஹ்மான்



ஆஹா...
அடடா...
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
அனால் ஹே
கண்டேன் ஹே
ஓர் ஆயிரம் கனவு
ஹே கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டையும்
திருடிக் கொண்டாய்

ஓ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே ஓமன

ஒ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில்
அசைகிறதுன் சேலை
விடிகிறதேன் காலை

உன் பேச்சு உன் பார்வை
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பன் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே ஓமன

ஒ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

மரகதத் தொட்டிலில் மலையாளிகள்
தாராட்டும் பெண்ணழகே
மாதங்கத் தோப்புகளில்
பூங்குயிளுகள் ஈன்ற சேர்ன
புல்லாங்குழல் ஊதுகையான
நின்னழகே நின்னழகே

தள்ளிப் போனால் தேய்பிறை
ஆகாய வெண்ணிலவே
அங்கேயே நின்றிடதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன்
பொடியன்

ஓ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே ஓமன

ஒ ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே ஓமனப்பெண்ணே
ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

ஓமனப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்ணே
உயிர் தருவதும் சரி தானே

வெள்ளி, 12 மார்ச், 2010

நிழலினை நிஜமும் - ராம்

DEDICATED TO : DAKKALTI (BLOGGER)
பாடியவர் : விஜய் ஜேசுதாஸ், யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : நிழலினை நிஜமும்
படம் : ராம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா


நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

நடமாடும் சைவமா நான் இங்கு இருக்கேன்
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் துப்பும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா

உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கு தீன் சொந்தமம்மா
பாத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகிக் கெடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப் போச்சு
சேரி செய்ய வழியும் தெரியலம்மா

சூரியன் ஒடஞ்சா பகல் இல்ல அம்மா
ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்தில உன்ன நானும் தொலச்செனம்மா
தேடித் தர தெய்வம் வந்து உதவிடுமா

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா