ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

விடிகின்ற பொழுது - ராம்

பாடியவர் : மதுமிதா
பாடல் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
படம் : ராம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா


விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதட

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடுபோகும் நேரம் மரணத்தின் வாசல்

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொள்ள துனிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிக்க வெச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டுத்தீ போல கண்மூடித் தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய்ப்பொத்தி வாய்ப்பொத்தி நகருதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா
உன்னை விட கல்லறையே பக்கமடா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்

பாடியவர் : ஜெயச்சந்திரன், S ஜானகி
பாடல் : தாலாட்டுதே வானம்
படம் : கடல் மீன்கள்
இசை : இளைய ராஜா


தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே தாகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்ரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மோதி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

Say it to me now - Once (2006)

Singer : Glen Hansard
Song : Say it to me now
Album : once (2006)
Composer : Glen Hansard and Marketa Iglova


Scratching out the surface now
And tried hard to work it out
So much has gone misunderstood
And this mystery only leads to doubt
And I didnt understand
When you reach down and take my heart
And if you have something to say
You would better say it now

Cause this is what u've waited for
Your chance to even up the score
And asking fall on me now - i will somehow

Cause i am picking up a message to the lord
And im closer than ever been before

So if you have something to say

Say it to me now
You say it to now
Ohh... Oh.. Oh.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

மலைக்கோயில் வாசலில் - முத்து

பாடல் : மலைக்கோயில் வாசலில்
படம் : முத்து
இசை : இளைய ராஜா

 

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

நாடகம் ஆடிய பாடகன் ஒ..
நீ இன்று நான் தொடும் காதலன் ஒ..

நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பேரழகும் சின்ன தேரழகும்
உன்னைச் சேராதா உடன் வாராதா

மானழகும் கெண்டை மீனழகும்
கண்கள் காட்டாத இசை கூட்டாதா

பாலாடை இவள் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

நானொரு பூச்சரம் ஆகவோ
மீழ்ப்புழல் மீதினில் ஆடவோ

நானொரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர்ப் பாடும்

பூங்கரத்தில் பசும் பொன்னிறத்தில்
வளை கூத்தாடும் உந்தன் பேர்ப் பாடும்

மாக்கோலம் மழைநீர் கோலம்
அந்த நாள் காணும் இந்த ஊர்கோலம்

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் பொங்குது
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..!!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ஒரு இளவம் பஞ்சு போலே - மதுரை சம்பவம்

பாடியவர் : ஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம்
பாடல் : ஒரு இளவம் பஞ்சு போலே
படம் : மதுரை சம்பவம்
இசை : ஜான் பீட்டர்


ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே

மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
நீ என் இரண்டாம் கருவறை

ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே

வேரில்லா சிலுவையில்
பூத்தது பூ ஒன்று
அது போல பூத்தேனே உன்னில் இன்று

பூனைக்கு காதலும்
வந்தது போல் இன்று
சொல்லாமல் தவித்தேனே உன் முன் நின்று

தொடர்கிற ரயில் சத்தம் போல
தூக்கத்தை கலைக்கிறாய்

மிதிவண்டி பழகிடும் ஒரு
சிறுவனாய் மோதி விழுகிறாய்

வாழ்கையை ரசித்திட கற்றுக் கொடுத்தாய்
காதல் தத்து எடுத்தாய்
என் நெஞ்சுக்குள்ளே நிரந்தர
மெத்தையிட்டு நீயும் படுத்தாய்

ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே

தனக்கு மேலே ஒரு
காதலின் மேகம் ஒன்று
அது உந்தன் வெப்பத்தால் மழையானதே

சாலையின் சத்தத்திலும்
உனது பேரைச் சொன்னால்
அது எந்தன் சங்கீத இசை ஆனதே

திருவிழா நெரிசலில்
மனம் தொலைகிற குழந்தையா

கண்ணீரும் இனிக்குதே
காதல் வேதியியல் விந்தையா

காதலும் வேண்டாமென திட்டமிட்டேனே
சுற்றி வட்டமிட்டேனே
இன்று உன்னை மட்டும்
உள்ளே வர ஏனோ நானும்  விட்டுவிட்டேனே

ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே

மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
என்னை நான் இழந்தேன் முதல்முறை

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி

பாடியவர் : யுவன்ஷங்கர் ராஜா
பாடல் : ஒரு கல்
படம் : சிவா மனசுல சக்தி
இசை : யுவன்ஷங்கர் ராஜா



ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணையாகுமே ஒ ...
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

திமிருக்கு மறுப்பெயர் நீ தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ எனப் புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனைத் தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எறிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன்னுள் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தல் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வழிகள்

காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணையாகுமே ஒ ...
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

புள் பேசும் பூ பேசும் - புதுப்பேட்டை

பாடியவர் : விஜய் ஜேசுதாசு, ரான்வி
பாடல் : புள் பேசும் பூ பேசும்
படம் : புதுப்பேட்டை
இசை : யுவன்ஷங்கர் ராஜா



can u feel me...now put ur hands up high
can u feel me...now get ready to my sisterz.. ready come on...

புள் பேசும் பூ பேசும்
புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை
பெண் பார்வை வலை வீசும்
புயல் வீசும் மழை வீசும்
கடை விரித்து கண் வீசும்
நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை



மோகத்தில் கொஞ்சம்
தாகத்தில் கொஞ்சம்
இது தானே வாழ்க்கை மொத்தம்
இதிலேன்னே வேஷம்

ஒரு பக்கம் எரியுதடி
மறு பக்கம் குளிருதடி
முன்ஜென்மம் தெரயுதடி
சக்கரத்தில் என்னை வைத்து சுற்றி விடும் காலம்



வா வா என்றது பின்பம்
நில் நில் சொன்னது நெஞ்சம்
நீ நான் என்பது மாயை
போ போ ஒட்டிடு பேயை

போதையில் நீ விழுந்தால்
அங்கே கூச்சங்கள் கிடையாது
பள்ளத்திலே பாயும்
நதிகள் மலை மேல் ஏறாது

படைத்தவன் சொன்னாலும்
புலிகள் மரத்தில் வாழத்து
காலம் வந்து விட்டால்
இலைகள் கிளையில் தங்காது 

விருப்பத்தில் கொஞ்சம்
வருத்தத்தில் கொஞ்சம்
இது தானே வாழ்க்கை மொத்தம்
இதிலென்ன வேஷம்

உன்ன கூட்டிகிட்டு கடைக்கு போறேன்
உனக்கு வேண்டியது வாங்கித் தாரேன்
ஏன் வீட்டுக்கு தான் கூட வாடி
எங்க போனாலும் கூட வா நீ
நேத்து உன்ன பாக்கலியே - அட
இன்னைக்கி நான் தூங்கலியே



காலையில என்னாகும் கல்யாணம் யாருக்காகும்
காலையில என்னாகும் கல்யாணம் யாருக்காகும்



போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுராகுமா
போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுராகுமா
கெட்டப்பின் நாணம் ஏனம்மா
அட கட்டிலில் நியாய தர்மமா

எனதுயிரே எனதுயிரே - பீமா

பாடியவர் : சின்மயி, நிக்கில் மேத்யூ
பாடல் : எனதுயிரே எனதுயிரே
படம் : பீமா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்



எனதுயிரே எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்


நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே


எனதுயிரே எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

இனி இரவே இல்லை
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளரலும் எனக்கு இசை

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப் போனாய் நல்ல ஓவியம்


சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்

எனதுயிரே எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

எனதுயிரே எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே

நீளுமே - காதல் - காதல் - வாசமே!

செல்லமே செல்லம் - ஆல்பம்

பாடியவர் : ஹிரிஹரனும், ஷ்ரேயா கோஷலும்
பாடல் : செல்லமே செல்லம்
படம் : ஆல்பம்
இசை : கார்த்திக் ராஜா



என் செல்லம்
என் சினுக்கு
என் அம்முக்குட்டி என் பொம்முக்குட்டி என் புஜ்ஜிக்குட்டி..
என் பூனைக்குட்டி...

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டி கொள்வோம்

tell me now tell me now
tell me tell me tell me now
tell me now tell me now
tell me tell me tell me now

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

லாலா லாலா லா...
லாலா லாலா லா...
லாலலாலலா லாலாலாலா லா...

சந்திரத் தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வெய்ப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் எல்லாமே
அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்

நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தா திய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி

செல்லமே செல்லம்.. என்றாயடியே..
செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி.. யாதுமாகி என்னுள் நின்றாயடியே

என் செல்லம்
என் சினுக்கு
என் அம்முக்குட்டி என் பொம்முக்குட்டி என் புஜ்ஜிக்குட்டி..
என் பூனைக்குட்டி...

காலைச் சூரியன் குடைப் பிடிக்க
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க
விழியே உன்னை கைப்பிடிப்பேன்

நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடவே
உயிரால் உயிரை அடைந்திடுவேன்

வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே..

தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாதிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி

செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என்னுள் நின்றாய்க் கண்ணா?


செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என்னுள் நின்றாய்க் கண்ணா?


உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாலி கட்டிக் கொள்வேன்


tell me now tell me now
tell me tell me tell me now
tell me now tell me now
tell me tell me tell me now


செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என்னுள் நின்றாய்க் கண்ணா?


லாலா லாலா லா...
லாலா லாலா லா...
லாலலாலலா லாலாலாலா லா...

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எங்கே எங்கே - அசல்

பாடியவர் : கார்த்திகேயன் மற்றும் குழுவினர்
பாடல் : எங்கே எங்கே
படம் : அசல்
இசை : பரத்வாஜ்



எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வரிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய்
செய்தானே மனிதன் செய்தானே

கடுகைப் பிளந்து காணும் போது
வானம் இருண்டிட கண்டேன்
நான் உறவை திரந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலை தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரை தொட்டால் நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சாம்பலில் உயிர்க்கும் பறவைப் போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

சனி, 13 பிப்ரவரி, 2010

Are you really here - once

Singer : Marketa Iglova
Song : Are you really here
Album : once (2006)
Composer :  Glen Hansard and Marketa Iglova


Song goes here:

Are you really here
or am I dreaming


I can’t tell dreams from truth


For it’s been so long
since I have seen you


I can hardly remember your face anymore


When I get really lonely
and the distance calls its only silence


I think of you smiling
with pride in your eyes a lover that sighs


If you want me satisfy me
If you want me satisfy me


Are you really sure
that you believe me


When others say I lie


I wonder if you could
ever despise me


You know I really try


To be a better one to satisfy you
for you’re everything to me


And I do what you ask me
If you let me be free


If you want me satisfy me
If you want me satisfy me


If you want me satisfy me
If you want me satisfy me

ஓ ஆயியே - அயன்

பாடியவர் : பென்னி டாயல், ஹரிச்சரண், சின்மயி
பாடல் : ஓ ஆயியே
படம் : அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்



ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

ஓ… நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
என் கையில் வளைந்த என் மீது மிதந்த
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகிலே

ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில்
தேன் எங்கே இங்கு பூவேதான்
தேன் தேன் தேன் தேன் தேன்

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

ஓ… நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு இரசித்தேன்

முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய்

ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே

ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ

என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்

பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
பாடல் : சங்கீத ஜாதி முல்லை
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா

 

நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா  - - (2)

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..

ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..

காற்றுக்குள்ளே வாசம் போல - சர்வம்

பாடியவர் : யுவன்ஷங்கர் ராஜா
பாடல் : காற்றுக்குள்ளே
படம் : சர்வம்
இசை : யுவன்ஷங்கர் ராஜா


காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போல அட உனக்குள் நான்
மாறாதே மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னைப்போல்
தீராதே கண்ணோடு என்றுமே
உயிர் ஈரம் எப்போதும் என்னை போல்
என்னை போல்

நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
நடு காட்டில்தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே!

சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு

பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
பாடல் : சிப்பி இருக்குது
படம் : வறுமையின் நிறம் சிவப்பு
இசை : இளையராஜா




சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சந்தங்கள்..
நீயானால்..
சங்கீதம்..
நானாவேன்..


சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிரிக்கும் சொர்க்கம்
தங்க தட்டு எனக்கு மட்டும்
தேவை பாவை பார்வை
நினைக்க வைத்து

நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

மழையும் வெயிலும் என்ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர உள்ளம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில் என் மனதில் நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதில் நீ அறிய நான் உரைத்தேன்

பெ: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்துப் பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாடி நேரம் கலந்திருப்பது எப்போது

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

கடலோரம் ஒரு ஊரு - குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்

பாடியவர்: யுவன்ஷங்கர் ராஜா
பாடல்: கடலோரம் ஒரு ஊரு
படம்: குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்


உல்லே லே லே லே..
உல்லே லே லே லே..

கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ
தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு

உல்லே லே லே லே..
உல்லே லே லே லே..

கன்னங்களை காட்டு கையெழுத்து போட்டிடவேண்டும் ஈர உதடுகளால்
பல்லு படும் லேசா கேலி பேச்சு கேட்டிட நேரும் ஊரு உறவுகளால்
பாட்டம் பூட்டன் செஞ்ச தவறு இது
யாரு நம்ம இங்கு தடுக்கறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ
இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்

உல்லலே லே உல்லலே லே..
உல்லலே லே உல்லலே லே..

ஓ .... பள்ளிக்கூட சிநேகம் பள்ளியறை பாய் வரை போகும் யோகம் நமக்கிருக்கு
கட்டுகளைப் போட்டு நட்டு வச்ச வேலிகள் தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு
புள்ளி வைக்க இந்த பூமி உண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே..
நீ இன்றி நானும் இல்லையே
காத்தா இருக்க மூச்சில
மொழியா இருக்க பேச்சில
துணியா இருப்பேன் இடையில
துணையா இருப்பேன் நடையில
கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ
தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு

உல்லலே லே உல்லலே லே..
உல்லலே லே உல்லலே லே..

ஒரு நாளில் - புதுப்பேட்டை

பாடியவர் : யுவன்ஷங்கர் ராஜா
பாடல் : ஒரு நாளில் வாழ்கை இங்கே..
படம் : புதுப்பேட்டை


ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப் போகாது…
மறு நாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூ பூக்கும்

கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு..
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால்…………..

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம் ஓ…ஓ…ஓ…

அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே - ஓ…ஓ…ஓ…
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே - ஓ…ஓ…ஓ…
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே - ஓ…ஓ…ஓ…
அந்த கடவுளைக் கண்டால் ஓ…ஓ…ஓ…

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இதை எடுத்துக் கொள்வான்
நல்லவன் அட யார் கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே

உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம் ஓ…ஓ…ஓ…
பல முகங்கள் வேண்டும் சரி மாற்றிகொள்வோம் ஓ…ஓ…ஓ…
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் ஓ…ஓ…ஓ…
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் ஓ…ஓ…ஓ…
மறு பிறவி வேண்டுமா?ஓ…ஓ…ஓ…