செவ்வாய், 16 மார்ச், 2010

கடவுள் தந்த அழகிய - மாயாவி

பாடியவர் : SPB சரண், கல்பனா
பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வு
படம் : மாயாவி
இசை : தேவிஸ்ரீ பிரசாத்



கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு


எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடை பெரும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனித் தனி காற்றுக் கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இல்லை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்து விட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக