ஞாயிறு, 14 மார்ச், 2010

இது வரை - கோவா

DEDICATED TO : CLIFFORD SATISH (FRIEND)
பாடியவர் : அஜீஷ், ஆண்ட்ரியா
பாடல் : இது வரை
படம் : கோவா
இசை : யுவன் ஷங்கர் ராஜா



இது வரை இல்லாத உணர்விது 
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ 

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ 

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக் கிடைத்தது இங்கே 

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக் கிடைத்தது இங்கே

இங்கே ஒரு எண்ணம் வந்து நிறைய 
எப்போது ஏன் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே 
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள 
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ..

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை 
யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் இந்த நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே 

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

3 கருத்துகள்:

டக்கால்டி சொன்னது…

இந்த பாடலில் ஆண்ட்ரியாவின் குரல் மிகவும் வசீகரிக்க கூடிய வகையில் இருக்கும்.

vino சொன்னது…

பாடலை கேட்ட போது நானும் இதையே உணர்ந்தேன். ஆண் குரலும் அதற்கேற்றார் போல் அமைந்திருக்கும். அஜீஷ் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் super singer நிகழ்ச்சியின் பங்கேற்றவர் என்று கேள்விப் பட்டேன். உண்மையா எனத் தெரியவில்லை.

டக்கால்டி சொன்னது…

அஜீஸ் அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் தான்...

கருத்துரையிடுக