வெள்ளி, 21 மே, 2010

இந்த நிமிஷம் - ஹலோ

பாடியவர் : ஹரிஹரன், K S சித்ரா
பாடல் :  இந்த நிமிஷம்
படம் :  ஹலோ
இசை : தேவா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலைவனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்

இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாதா
என் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிடக் கூடாதா

இப்படியே இப்படியே இறந்து விடக் கூடாதா
இப்படியே காலங்கள் உறைந்து விடக் கூடாதா

வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்துவிடக் கூடாதா
வின்மீங்கள் நிலவாக வளர்ந்துவிடக் கூடாதா

அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம் வரை ஊடாட கூடாதா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்

நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டுப் போகாதே
என் உயிரை தீ குழியில் எறிந்து விட்டுப் போகாதே

பல்லவியே பல்லவியே பாடல் விட்டுப் போகாதே
வாசல் வரை வந்த நதி வற்றிவிடக் கூடாதே

மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிடக் கூடாதே
மார்போடு உன் சூடு ஆறிவிடக் கூடாதே

அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில்
என்னோடு என் உயிரும் கரைந்துவிடல் ஆகாதா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்

வியாழன், 20 மே, 2010

எனக்கென ஏற்கனவே - பார்த்தேன் ரசித்தேன்

பாடியவர் : உன்னி கிருஷ்னன், ஹரினி
பாடல் : எனக்கென ஏற்கனவே
படம் : பார்த்தேன் ரசித்தேன்
இசை : பரத்வாஜ்

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி


ஓரப் பார்வை பார்கும்போதே
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது
எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசையும் மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி

வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை..

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி


என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி


ஓரப் பார்வை பார்கும்போதே
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே

சௌக்கியமா - சங்கமம்

பாடியவர் : நித்யஸ்ரீ
பாடல் : சௌக்கியமா
படம் : சங்கமம்
இசை : ஏ ஆர் ரஹ்மான்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா


தன தோம் ததீம் ததோம் ததீம் ததனதன தோம் தனதோம்
ததிறு திதிறு தனதன தோம் தனதோம்
தகு திகு தனதன தோம் தனதோம்


தன தோம் தோம் ததீம் தீம் ததோம் தோம் ததீம்
என விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்


மனதை தருவும் ஒரு அம்பானாய் (இருமுறை)


பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய் (இருமுறை)


ஜனு ததீம் ஜனு ததீம் ஜனு ததீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா


சூரியன் வந்து வாவெனும் போது (மும்முறை)
என்ன செய்யும் பனியின் துளி (இருமுறை)


கோடிக் கையில் என்னைக் கொல்லையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொல்லையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு


அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை (4 முறை)


அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா


தன தோம் ததீம் ததோம் ததீம் ததனதன தோம் தனதோம்
ததிறு திதிறு தனதன தோம் தனதோம்
தகு திகு தனதன தோம் தனதோம்


தன தோம் தோம் ததீம் தீம் ததோம் தோம் ததீம்
என விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்


மனதை தருவும் ஒரு அம்பானாய் (இருமுறை)


பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய் (இருமுறை)


ஜனு ததீம் ஜனு ததீம் ஜனு ததீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ


சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா (8 முறை)

ஒரு பொய்யாவது சொல் கண்ணே - ஜோடி

பாடியவர் : ஹரிஹரன்
பாடல் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே
படம் : ஜோடி
இசை : ஏ ஆர் ரஹ்மான்


ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தாரோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோல் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே ஒ
காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தவள் யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்