பாடல் : ஒரு இளவம் பஞ்சு போலே
படம் : மதுரை சம்பவம்
இசை : ஜான் பீட்டர்
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே
மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
நீ என் இரண்டாம் கருவறை
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே
வேரில்லா சிலுவையில்
பூத்தது பூ ஒன்று
அது போல பூத்தேனே உன்னில் இன்று
பூனைக்கு காதலும்
வந்தது போல் இன்று
சொல்லாமல் தவித்தேனே உன் முன் நின்று
தொடர்கிற ரயில் சத்தம் போல
தூக்கத்தை கலைக்கிறாய்
மிதிவண்டி பழகிடும் ஒரு
சிறுவனாய் மோதி விழுகிறாய்
வாழ்கையை ரசித்திட கற்றுக் கொடுத்தாய்
காதல் தத்து எடுத்தாய்
என் நெஞ்சுக்குள்ளே நிரந்தர
மெத்தையிட்டு நீயும் படுத்தாய்
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே
தனக்கு மேலே ஒரு
காதலின் மேகம் ஒன்று
அது உந்தன் வெப்பத்தால் மழையானதே
சாலையின் சத்தத்திலும்
உனது பேரைச் சொன்னால்
அது எந்தன் சங்கீத இசை ஆனதே
திருவிழா நெரிசலில்
மனம் தொலைகிற குழந்தையா
கண்ணீரும் இனிக்குதே
காதல் வேதியியல் விந்தையா
காதலும் வேண்டாமென திட்டமிட்டேனே
சுற்றி வட்டமிட்டேனே
இன்று உன்னை மட்டும்
உள்ளே வர ஏனோ நானும் விட்டுவிட்டேனே
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இளவம் பஞ்சு போலே
இதயம் பறக்குது மேலே
ஒரு இறகுப் பந்து போலே
பூமி நழுவுது கீழே
மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
என்னை நான் இழந்தேன் முதல்முறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக